» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதிச்சநல்லூரில் கல்லூரி மாணவிகள் ஆய்வு

புதன் 14, ஆகஸ்ட் 2019 5:20:29 PM (IST)ஆதிச்சநல்லூரில் பல்வேறு பகுதிகளை காயல்பட்டினம் கல்லூரி மாணவிகள் ஆய்வு செய்தனர்.

காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி தமிழ்துறை மாணவிகள் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் ஆய்வு செய்தனர். அவர்கள் ஆதிச்சநல்லூரில் ஆய்வு நடந்த இடம், மற்றும் வேலி அமைக்கும் இடம் உள்பட பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினர். அதன் பின் கிருஷ்ணாபுரம் கலை சிற்பங்களை பார்த்து ரசித்தனர். தொடர்ந்து பாளையங்கோட்டை அருங்காட்சியகத்தில் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருள்களை பார்த்தனர். 

அதன் பின் அங்கு நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர். கருத்தரங்குக்கு தமிழ் துறை தலைவர் அருணா ஜோதி தலைமை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு முன்னிலை வகித்தார். அருங்காட்சிய காப்பாட்சியர் சிவசக்தி வள்ளி சிறப்புரையாற்றினார். இந்த கருத்தரங்கில் பேராசிரியர்கள் சத்திய பாமா, கல்பான தேவி கிறிஸ்டி மெர்சி, ஹெலன், மாரித்தங்கம், முத்துக்குமாரி, செல்வி, கீதா ரஞ்சித பாக்கியம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

Nalam PasumaiyagamBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory