» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆகஸ்ட்.17ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : கனிமொழிகருணாநிதி எம்.பி., பங்கேற்கிறார்.

புதன் 14, ஆகஸ்ட் 2019 1:55:17 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தில் ஆகஸ்ட். 17, 18-ல்  நடைபெறும் நிகழ்ச்சிகளில் கனிமொழிகருணாநிதி எம்.பி., பங்கேற்கிறார். 

இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காயல்பட்டணத்தில் முஸ்லீம் மாணவர் பேரவை சார்பில் வருகின்ற 17-ம் தேதி முஹியத்தீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கே.எஸ்.சி. மைதானத்தில் வைத்து காலை 9 மணிக்கு மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொள்கிறார்.

இதே போல் காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டுச் சங்கம் சார்பில் சுதந்திர தின விளையாட்டுப்போட்டிகள் மற்றும் போதை ஒழிப்பு மற்றும் சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு தடகளப்போட்டிகள் நாளை (ஆக. 15-ம் தேதி) தொடங்கி 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான பரிசளிப்பு விழா மற்றும் ஆசிய தடகளப்போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிமாரிமுத்துக்கு பாராட்டு நிகழ்ச்சியும் வரும் 18ம் தேதி மாலை 4 மணிக்கு காயல்பட்டணம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி தொகுதி எம்பி., கனிமொழி கருணாநிதி கலந்து கொள்கிறார்.எனவே இரு நிகழ்ச்சிகளிலும் திமு கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Nalam Pasumaiyagam





Black Forest Cakes



Thoothukudi Business Directory