» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போதையில் தகராறு: வாலிபரை கத்தியால் குத்தியவர் கைது

புதன் 14, ஆகஸ்ட் 2019 11:40:35 AM (IST)

தூத்துக்குடியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி அமுதாநகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் அருணாசலம் மகன் சுடலைமணி (48). குளத்தூர் அருகே உள்ள பனையூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகன் முத்துகிருஷ்ணன் (23). இருவரும் தூத்துக்குடியில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வேலைபார்த்து வருகின்றனர். வேலைமுடிந்து நேற்று இரவு மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரம் அடைந்த சுடலைமணி முத்துகிருஷ்ணனை கத்தியால் குத்தியுள்ளார். படுகாயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் வழக்குப்பதிந்து சுடலைமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications




Nalam Pasumaiyagam

CSC Computer Education



Thoothukudi Business Directory