» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொள்ளையர்களை விரட்டிய நெல்லை மாவட்ட தம்பதி : நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 7:15:10 PM (IST)

கொள்ளையர்களை விரட்டிய நெல்லை மாவட்ட தம்பதிக்கு நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கடையத்தை அடுத்த கல்யாணிபுரத்தில் தோட்டத்து வீட்டில் தனியே வசித்து வரும் சண்முகவேல் - செந்தாமரை தம்பதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை கொள்ளையர்கள் இருவர் தாக்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அரிவாளுடன் வந்து தாக்க முயன்ற கொள்ளையர்களை வீட்டில் இருந்த பொருட்களைக் கொண்டு தாக்கி முதிய தம்பதி விரட்டியடித்தனர். 

இருப்பினும் செந்தாமரையின் கழுத்தில் இருந்த 5 சவரன் நகையைப் பறித்துக் கொண்டு அவர்கள் இருவரும் தப்பிச் சென்றனர். கொள்ளையர்களுடன் முதிய தம்பதி போராடிய சிசிடிவி காட்சிகள் ஊடகங்களில் வெளியாகிய நிலையில், அந்த தம்பதிக்கு நடிகர் அமிதாப்பச்சன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் ப்ராவோ என பாராட்டு தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


CSC Computer Education


Nalam Pasumaiyagam

Anbu Communications



Thoothukudi Business Directory