» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மானிய டீசல் வழங்கக்கோரி முற்றுகையிட்ட மீனவர்கள்: தூத்துக்குடி மீன்வளத்துறை அலுவலகத்தில் பரபரப்பு

செவ்வாய் 13, ஆகஸ்ட் 2019 4:04:20 PM (IST)



தூத்துக்குடியில் மானிய டீசல் வழங்கக்கோரி மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் 1300-க்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு மானிய முறையில் டீசல் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்பொழுது 940 பேருக்கு மட்டும்தான் மானிய டீசல் வழங்கப்படுகிறது. எஞ்சியுள்ள 400 மீனவர்களுக்கு டீசல் வழங்கப்படவில்லை. இதையடுத்து அனைவருக்கும் மானிய டீசல் வழங்கக்கோரி மீன்வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர்.

அப்போது மீனவர்கள் கூறுகையில், இது குறித்து ஏற்கனவே மீன்வளத்துறை இணை இயக்குனரை சந்தித்து நாங்கள் கோரிக்கை மனு அளித்திருந்தோம். ஆனால் 9 மாதங்கள் ஆகியும் தற்பொழுது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மானிய டீசல் கிடைக்கப் பெறாத  மீனவர்களுக்கு உடனடியாக மானிய டீசல் வழங்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் கடலுக்குச் சென்று தொழில் செய்ய முடியும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உடனடியாக மானிய டீசல் வழங்க மீன்வளத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் இது போராட்டமாக மாறும் என்று தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications

Black Forest Cakes

Nalam Pasumaiyagam


CSC Computer Education



Thoothukudi Business Directory