» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வழக்கறிஞரின் காருக்கு தீ வைப்பு

திங்கள் 12, ஆகஸ்ட் 2019 6:48:39 PM (IST)தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தில் வழக்கறிஞரின் கார் திடீரென தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் அய்யர்விளை பகுதியினை சேர்ந்தவர் சந்திரசேகர் என்பவரது மகன் மாரி ராஜ்குமார் (31).  வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இன்று மதியம் சுமார் 3 மணியளவில் தனது வீட்டின் முன்பு காரை நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளார். மீண்டும் வெளியே வந்து பார்க்கையில் தனது கார் தீப்பிடித்து எரிவது கண்டு அதிர்ச்சியடைந்தார். 

தொடர்ந்து அங்கிருந்தவர்கள் தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் பாதிக்கு மேல் கார் எரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesNalam Pasumaiyagam

Anbu Communications

Thoothukudi Business Directory