» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கழிவுநீர் தொட்டியில் விழுந்து கல்லூரி மாணவி சாவு : தூத்துக்குடியில் பரிதாபம்

திங்கள் 12, ஆகஸ்ட் 2019 1:00:40 PM (IST)

தூத்துக்குடியில் கழிவுநீர் தொட்டியில் தவறிவிழுந்து கல்லூரி மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி தாளமுத்துநகர், சுடலையாபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமணி மகள் சரஸ்வதி (19). இவர் தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள பெண்கள் கல்லூரியில் பிகாம் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று தனது வீட்டில் கழிவுநீர் மீது ஏறி நின்று துணி காயப்போட முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தொட்டியின் மூடி உடைந்து அவர் கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்தார். 

இதில், அவர் கழிவு நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் தங்க கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். சரஸ்வதியின் உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory