» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குப்பைத் தொட்டியில் பெண் சடலம் : மகனிடம் போலீஸ் விசாரணை

திங்கள் 12, ஆகஸ்ட் 2019 12:40:36 PM (IST)

தூத்துக்குடியில் இறந்த தாயின் உடலை குப்பைத் தொட்டியில் வீசிய மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி தனசேகரன் நகர் பகுதியில் மெயின் ரோட்டில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், சப் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த நாராயணன சுவாமி மனைவி வசந்தி (55) எனத் தெரியவந்தது. 

இதையடுத்து அப்பெண்னின் மகன் முத்துலெட்சுமணன் (35) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தனது தாயார் உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டதாகவும், உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாததால் சடலத்தை போர்வையில் சுற்றி குப்பைத் தொட்டியில் வீசியதாகவும் கூறியுள்ளார். ஆனால், அவர் கூறுவது உண்மையா? வேறு எதுவும் காரணம் உள்ளதா? என போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications


Black Forest Cakes


Nalam PasumaiyagamThoothukudi Business Directory