» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

புதிய கல்விக்கொள்கையில் அரசியலை புகுத்தாதீர்கள் : தூத்துக்குடியில் தமிழிசை பேட்டி

புதன் 24, ஜூலை 2019 11:00:44 AM (IST)பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களோடு தமிழக மாணவர்கள் போட்டி போடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில் அரசியலை புகுத்தாதீர்கள் என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு சந்தித்த அவர், பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்காத மக்கள் வருத்தப்படுகிறார்கள். பாஜகவில் மக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் சேர்ந்து வருகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் 50 நாட்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்து பட்டியலை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்த பிரதமர் வேட்பாளர் தற்போது லண்டனில் உள்ளார். இதற்காக ஸ்டாலின் தலைகுனிய வேண்டும். ஸ்டாலின் போடும் கணக்கு எல்லாம் தப்புகணக்காக அமைந்துள்ளது. 

தமிழை நாங்கள் காப்பாற்றுகிறோம். தமிழை யாராலும் அழிக்க முடியாது. மத்திய அரசு இந்தியை திணிக்கும் எண்ணத்தில் ஒருபோதும் இல்லை, அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அதற்கு எதிராக அரசிடம் குரல் கொடுக்கும். அதிகாரிகள் செய்த தவறால் அஞ்சல் துறை, ரயில்வே துறையில் சில தவறுகள் நடந்து விட்டது. கஸ்தூரிரங்கன் தலைமையில் 1976 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கை கல்விக் கொள்கையில் பல்வேறு ஆசிரியர்கள் பெற்றோர்கள் பேராசிரியர்கள் என பல பேர் கொண்ட குழுவினர் ஆராய்ச்சி செய்து புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கல்விக் கொள்கை வெளி மாநில, மற்றும் வெளிநாட்டு மாணவ மாணவிகளுடன் நமது மாணவர்கள் போர் சவால் விடும் வகையில் அமைந்துள்ளது. எனவே இந்த கல்விக் கொள்கையை மாற்றியமைக்க கோரி இத்திட்டத்தில் அரசியலை புகுத்தாதீர்கள். தமிழகத்தில் திமுகவை சேர்ந்த 37 பேர் வெற்றி பெற்ற போதிலும் பாராளுமன்றத்தில் ஒரு சிலர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி சர்வாதிகாரமாக பேசி வருகிறார்கள். தமிழகத்திற்கு தேவையான பல்வேறு ரயில் திட்டங்கள் தொடர்ந்து கொண்டு வருவதற்கு பாரதிய ஜனதா கட்சி மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். சென்னை உள்ளிட்ட பிற பகுதியில் இருந்து மணியாச்சி வரை வரும் ரயில்கள் தூத்துக்குடி வரை இயக்கப்படுவதற்கு ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் இடம் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. 

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க திமுகவினர் அதிக அளவில் செல்கின்றனர். திமுகவினர் அதிக பாவம் செய்தார்களா என்று தெரியவில்லை. ஸ்டாலின் சென்றால் கூட அச்சரியபட ஒன்றுமில்லை. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மோட்டார் வாகன சட்டம் விபத்துக்களை தடுக்கும் வகையில் மக்களை பாதுகாக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது, இதில் மாநில உரிமைகள் எந்த அளவுக்கும் பறிக்கப்படாது. உலக வங்கியின் சட்ட நடைமுறைகளின்படி கறுப்புபண பட்டியலில் முழுமையாக அவர்களால் வெளியிடப்பட்ட முடியவில்லை எனவே அந்தக் கருப்புப் பணம் குறித்து விசாரணை செய்வதற்காக பாரதப்பிரதமர் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளார். அந்த குழுவினர் விசாரணை மேற்கொண்டு கருப்பு பணம் பற்றிய பட்டியலை விடுவார்கள் என்ற நம்பிக்கையை அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Friends Track CALL TAXI & CAB (P) LTD

Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory