» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவ,மாணவிகளுக்கு இலவச மருத்துவ முகாம்

செவ்வாய் 23, ஜூலை 2019 7:24:13 PM (IST)பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீகணேசர் பள்ளிகள் கலையரங்கில் மாணவ, மாணவிகளுக்கான இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் சுமார் 750 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். 

குரும்பூர் அருகிலுள்ள பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீகணேசர் பள்ளி கலையரங்கில் பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீகணேசர் பள்ளிகளும்,நாசரேத் வின்சென்ட் டென்டல்கேர், வின்சென்ட் ஹோமியோ ஹேர் ஆகியவை இணைந்து மாணவ, மாணவிகளுக்கான இலவச ஹோமியோபதி மருத்துவ முகாமினை நடத்தினர்.

முகாமினை பள்ளி செயலாளர்சுப்பு நாடார் தலைமை வகித்து துவக்கி வைத்து பேசினார்.பள்ளி செயலாளர் துரை சுரேஷ்ராஜ்,பொருளாளர் ஜெகன் மோகன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.தலைமையாசிரியர் வித்யாதரன் வரவேற்று பேசினார். டாக்டர் ஆதித்யா ஹோமியோபதி மருத்துவம் குறித்து மாணவ, மாணவிகளிடையே உரையாற்றினார்.

இம்முகாமில் சுமார் 750 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். முகாமில் டாக்டர் விமல், டாக்டர் வில்லிக்ஸ்டன்,டாக்டர் அபிஜித் சாய் சங்கர், டாக்டர் அசோக், டாக்டர் டினு, டாக்டர் ஆதித்யா ஆகியோர் மாணவ,மாணவிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பணிக்க நாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் பள்ளிகள் தலைவர்,செயலாளர், பொருளாளர் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory