» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நறையன்குளத்தில் புதிய குளம் அமைக்கும் பணிகளை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்

செவ்வாய் 23, ஜூலை 2019 5:19:43 PM (IST)சாத்தான்குளம் அருகே நறையன்குளத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் புதிய குளம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சி நறையன்;குளத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின்கீழ் புதிய குளம் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, செய்தியாளர்களுடன் சென்று தொடங்கி வைத்தார். மேலும் அரசூர் ஊராட்சியில் மரக்கன்று நடும் திட்டத்தினை தொடங்கி வைத்து மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை பார்வையிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுடன் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அசின் ஜல்சக்தி அபியான் திட்டம் பொதுமக்களின் பங்களிப்புடன் ஊருக்கு நூறு கை திட்டத்துடன் இணைந்து சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. மழைநீரை சேமிப்பதன் அவசியம் உங்கள் அனைவருக்கும் தெரியும். இப்பகுதியில் மழைநீரை அதிக அளவில் சேமிப்பதால் அருகில் கடற்கரை உள்ளதால் உப்புநீர் உள்ளே வராமல் தடுக்க முடியும். ஊருக்கு நூறு கை திட்டத்தில் அதிக அளவிலான பொதுமக்கள் பங்களிப்புடன் குளங்கள் தூர்வாறும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

ஜல்சக்தி அபியான் திட்டத்தில் நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையில் குளங்களை தூர்வாறுதல், அதிக அளவு மழை பெறும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் மழைநீரை சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல், கிராம பகுதிகளில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு செய்து விவசாயத்திற்கு பயன்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. நறையன்;குளத்தில் இத்திட்டத்தில் புதிதாக குளம் அமைக்கப்படுகிறது. குளம் அமைத்திட வரதராஜன், சற்குணம் ஆகியோர் 1.76 ஏக்கர் நிலத்தினை தானமாக வழங்கியுள்ளனர். அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பொதுமக்கள் பங்களிப்புடன் டிராக்டர், ஜே.சி.பி இயந்திரங்கள் வரழைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய குளம் 3¼ ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. 

குளத்திற்கு அமைக்கப்படும் புதிய கறைகளில் அதிக அளவிலான மரக்கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது. பல்வேறு குளங்கள் புனரமைத்தாலும் இங்கு புதிய குளத்தினை உருவாக்குவதும் சிறப்பானதாகும். புதிய குளம் அமைக்கும் பணிகள் ஒரு மாத காலத்திற்குள் சிறப்பாக முடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து அரசூர் ஊராட்சி பகுதியில் மரக்கன்று நடும் பணிகளை மரக்கன்று நடவு செய்து மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். அங்கு அதிக அளவில் பள்ளி மாணவ, மாணவிகள் வருகை தந்து அவர்களும் மரக்கன்றுகளை நடவு செய்தார்கள். தொடர்ந்து அரசூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், இடைச்சிவிளை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, குமரன்வளைவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு அமைப்பகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். 

மேலும் ரத்னபுரி பகுதியில் பயன்படுத்தப்படாத ஆழ்குழாய் கிணற்றில் மழைநீர் சேமிக்கும் அமைப்பினையும் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் செல்வி.தனப்ரியா, வட்டாட்சியர் ஞானராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், செல்வி, பணி மேற்பார்வையாளர்கள் ரவிச்சந்திரன், விஜயராகவன், விவசாய சங்க தலைவர்கள் பால்துரை, லூர்துமணி, இளங்கோவன் ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory