» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 25 வட்டாட்சியர்கள் மாற்றம். : ஆட்சியர் உத்தரவு

வியாழன் 18, ஜூலை 2019 10:55:16 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 25 வட்டாட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி சிப்காட் தனி வட்டாட்சியர் (நில எடுப்பு) ராமசுப்பு, கோவில்பட்டி தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவில்பட்டி தனி வட்டாட்சியர் (ஆ.தி. நலம்) தாமஸ் பயாஸ் அருள் தூத்துக்குடி தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி தனி வட்டாட்சியர் (ச.பா.தி) கே.செல்வி சாத்தான்குளம் தனி வட்டாட்சியராக மாறுதல் செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தனி வட்டாட்சியர் (முத்திரை-1) ராஜூவ் தாகூர் ஜேக்கப் ஸ்ரீவைகுண்டத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தனி வட்டாட்சியர் (முத்திரை-2) தெய்வக்குருவம்மாள் கயத்தார் தனி வட்டாட்சியர் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி வட்டாட்சியர் ஜான்சன் தேவசகாயம், தூத்துக்குடி கோட்ட கலால் அலுவராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி கோட்ட கலால் அலுவலர் முருகானந்தம் கோவில்பட்டி தனி வட்டாட்சியராக (நகர நிலவரித்திட்டம்) மாற்றப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி தனி வட்டாட்சியர் (நகர நிலவரித்திட்டம்)செல்வபிரசாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (பேரிடர் மேலாண்மை) தனி வட்டாட்சியராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். பேரிடம் மேலாண்மை தனி வட்டாட்சியர் நெல்லை நாயகம் ஆட்சியர் அலுவலக (முத்திரை-2) தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.தூத்துக்குடி தனி வட்டாட்சியர் (கு.பொ.வ.)அழகர் எட்டையபுரம் வட்டாட்சியராக பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். நில எடுப்பு (தூத்துக்குடி முதல் மணியாச்சி சாலை) தனி வட்டாட்சியர் ரகு, ஓட்டப்பிடாடரம் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி டாஸ்மாக் கிட்டங்கி மேலாளர் ராமசந்திரன், தூத்துக்குடி நகர நிலவரித்திட்டம் (அலகு 2) தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி நகர நிலவரித்திட்டம் (அலகு 2) தனி வட்டா்சியர் பாக்கியலெட்சுமி, நிலஎடுப்பு (தூத்துக்குடி முதல் மேலமருதூர் வரை இருப்பு பாதை, எட்டையபுரம்)தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அப்பணியில் இருந்த ராஜசெல்வி சிப்காட் (நில எடுப்பு) தனி வட்டா்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல் மாவட்டம் முழுவதும் 25 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவு பிறப்பித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsFriends Track CALL TAXI & CAB (P) LTDBlack Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory