» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கோப்பை கூடைப்பந்து போட்டிகள் : இந்துஸ்தான் கல்லூரி அணி வெற்றி

புதன் 17, ஜூலை 2019 8:37:10 PM (IST)
தூத்துக்குடியில் நடைபெறும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சுழற்கோப்பைக்கான அகில இந்தியஅளவிலான கூடைப்பந்து லீக் போட்டியில் சென்னை இந்துஸ்தான் கல்லூரி அணி வெற்றி பெற்றது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சுழற்கோப்பைக்காக அரைஸ் ஸ்டீல் நிறுவனத்தின் ஆதரவுடன் தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் நடத்தும் 9வது அகில இந்திய அளவிலான கல்லூரி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மாபெரும் கூடைப்பந்து போட்டிகள் தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பிலுள்ள ராமகிருஷ்ணன் நினைவு மின்னொளி மைதானத்தில் இன்று மாலை துவங்கியது. போட்டிகள் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியை ஜிம்கானா கிளப்பின் தலைவர் ஜோபிரகாஷ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் தலைவர் பிரம்மானந்தம் ஆகியோர் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., அருண் பாலகோபாலன் துவக்கி வைத்தார்.  

இதில் சிறப்பு விருந்தினராக ஏஞ்சலின் ஜாஸ்மின் கலந்து கொண்டார். பெண்கள் பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை இந்துஸ்தான் கல்லூரி அணியும் எத்திராஜ் கல்லூரி அணியும் மோதின. முடிவில் 57 புள்ளிகள் பெற்று சென்னை இந்துஸ்தான் கல்லூரி அணி வெற்றி பெற்றது. மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications


Nalam Pasumaiyagam


Black Forest Cakes
Thoothukudi Business Directory