» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாப பலி

புதன் 17, ஜூலை 2019 7:10:46 PM (IST)



தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகில் பொறியியல் கல்லூரி மாணவர் சாலை விபத்தில் பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி அருகே வாகைகுளத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர் கிருஷ்ணா சுரேஷ். இவர் இன்று மாலை கல்லூரிக்கு சென்று விட்டு விட்டு கல்லூரி பேருந்தில் ஆழ்வார்திருநகரி வந்து இறங்கி அங்கிருந்து தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு  மெஞ்ஞானபுரம் அருகில் உள்ள தனது வீட்டிற்கு  புறப்பட்டுச் செல்லும் போது எதிரே வந்த வாகனம் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் நடுரோட்டில்  தலையில் பலத்த காயம் அடைந்து பலியானார். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Nalam Pasumaiyagam



Black Forest Cakes

Anbu Communications



Thoothukudi Business Directory