» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

முன்னறிவிப்பின்றி ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு: வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு

புதன் 17, ஜூலை 2019 5:49:53 PM (IST)

மாசு கட்டுப்பாடு வாரிய விதிகளை பின்பற்றியபோதும் முன்னறிவிப்பு இல்லாமல் ஆலையை மூட உத்தரவிடப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்தாண்டு மக்கள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆலையும் சீல் வைத்து மூடப்பட்டது. இதனிடையே ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி வேதாந்தா நிறுவனம்  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.   

இந்நிலையில், இந்த வழக்கு  விசாரணை இன்றும் நடைபெற்றது. அப்போது, மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை பின்பற்றியபோதும் எவ்வித முன்னறிவிப்பு இல்லாமல் ஆலையை மூட உத்தரவிடப்பட்டது. ஆலையால் மிக குறைவான பாதிப்பே ஏற்பட்டுள்ளது என வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டை முன்வைத்தது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Nalam Pasumaiyagam




Black Forest Cakes



Thoothukudi Business Directory