» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்திற்கு ரூ.4.4 கோடி நிதி ஒதுக்கீடு : ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தகவல்

புதன் 17, ஜூலை 2019 12:31:04 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற அரசு இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சமூகநலத் துறை சார்பில் பெண் குழந்தை பாதுகாப்பிற்காக பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2019-20-ம் நிதியாண்டிற்கு முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்திற்கு அரசிடமிருந்து 4.4 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இரண்டு பெண் குழந்தை மட்டும் உள்ளவர்களுக்கு குழந்தைக்கு தலாரூ.25,000/- எனவும் ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ளவர்களுக்கு ரூ.50,000/- என வழங்கப்பட்டுவருகிறது. 

இத்திட்டத்தில் பயன்பெற இரண்டாவது பெண் குழந்தை பிறந்து 3 ஆண்டு முடிவதற்க்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். பெண் குழந்தைகளின் தாய் மற்றும் தந்தை இருவரின் பள்ளிச்சான்று/கல்விச்சான்று/அரசு மருத்துவரிடம் பெறப்பட்ட வயதுச் சான்று (ஆண் வயது- 21 பெண்-18 எனவும் பெண்ணுக்கு 35 வயது மிகாமல் இருக்க வேண்டும்), பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்று, தாய் அல்லது தந்தை 35 வயதுக்குள் குடும்பக் கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான சான்று, வட்டாட்சியரிடம் பெறப்பட்ட குடும்ப ஆண்டு வருமானச் சான்று ரூ72000/-க்குள் இருக்க வேண்டும். 

ஜாதிச் சான்று, ஆண் குழந்தைகள் இல்லை என பெறப்பட்ட சான்று,ம ற்றும் இருப்பிடச் சான்று (வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட வேண்டும்), குடும்ப அட்டை நகல், குடும்ப புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு இ-சேவை மையம் மூலமாக இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு "மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி தொலைபேசி எண்: 0461-2325606 என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்" என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Anbu Communications

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory