» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றங்கள் : தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் பேட்டி

புதன் 17, ஜூலை 2019 12:10:44 PM (IST)தூத்துக்குடி பனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு நகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 

தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டவுண் டிஎஸ்பி பிரகாஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பனிமயமாதா ஆலயத் திருவிழாவுக்கு வந்து செல்லும் பொதுமக்களின்  போக்குவரத்து வசதிக்காக காவல்துறை சில முன்னேற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி நகரின் வடக்குப் பகுதியில் இருந்து வரும் 4 சக்கர வாகனங்களை நிறுத்திட முத்துநகர் பீச் வளாகமும், இருசக்கர வாகனங்களை நிறுத்திட பழைய துறைமுக சாலையோர பகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

இது போல் தெர்மல் நகர், முத்தையாபுரம் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் மீன்பிடி துறைமுக வளாகத்தில் நிறுத்த இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகரின் உள்பகுதியில் இருந்து வரும் இரு சக்கர வாகனஙக்ள் தீயணைப்பு நிலையம், லசால் பள்ளி வளாகத்தில நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுபோல் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்திட காராபேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணியில் போக்குவரத்து காவலர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

திருவிழாவில் முதல் முயற்சியாக குழந்தைகள் காணாமல் போவதை தடுத்து, எளிதில் கண்டறியும் வகையில் அவர்களது பெற்றேர்களின் விபரம், தொலைபேசி எண் அடங்கிய பட்டைகள் குழந்தைகளின் கைகளில கட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது போல் பெண்களின் தங்க நகைகள் திருடுபோவதை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் சேப்டி-பின் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆலய வளாகத்தில் 60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு புறக்காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் முக்கியப் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும். உயர்ந்த கட்டிடங்களில் காவல்துறையினர் பைனாகுலார் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.

அனைத்து பகுதிகளிலும் சீருடை அணியாத காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். பொதுமக்களுக்கு அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் முக்கியத் தகவல்கள் தெரிவிக்கப்படும். இருசக்கர வாகன ரோந்து, முக்கிய இடங்களில் புறக் காவல் நலையங்கள், புகார் பெட்டிகள் ஆகியவை அமைக்கப்படும். ஆலய வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் காவல் கட்டுப்பாட்டு அறை, காவல்துறை அதிகாிகள், காவல் நிலையங்களின் தொலைபேசி எண்கள் அச்சிட்டு தொங்கவிடப்படும். பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் திருவிழா நாட்களில் நீர், மோர் வழங்கப்படும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். திருவிழாவுக்கு வரும் மக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் ஹெல்மெட் கட்டாயம் அணிந்திட வேண்டும் என தெரிவித்தார். 

கஞ்சா விற்பனையை தடுக்க நடவடிக்கை

மேலும் அவர் கூறுகையில், "தூத்துக்குடி நகரில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. மீனவர்கள், பள்ளி மாணவர்கள் இதனை அதிகளவில் பயன்படுத்துவதாக தெரிகிறது. இதுபோன்ற போதைப் பொருள் விற்பனையைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை வருகிறது. கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது குண்டாஸ் வழக்குகளும் போடப்பட்டுள்ளது. கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை குறித்து தெரியவந்தால் பொதுமக்கள் காவல்துறைக்கு ரகசிய தகவல அளிக்கலாம். 

தூத்துக்குடி நகரில் தினமும் 5, 6 விபத்துக்கள் ஏற்ப்படுகிறது. இதனைத் தவிர்க்க பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும், காவல்துறை பல்வேறு பொது நல அமைப்புகள் மூலம் ஹெல்மெட் வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்கும் வகையில அங்காங்கே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு சந்தேகப்படும் நபர்களை உடனே பிடித்து விசாரித்து வருகிறோம். பள்ளி, கல்லூரி வாசல்களில் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்பு சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் காவல்துறைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். பேட்டியின்போது காவல் ஆய்வாளர்கள் ஜெயபிரகாஷ், பார்த்திபன், போக்குவரத்து ஆய்வாளர் சிசில், உதவி ஆய்வாளர்கள் ராஜாமணி, வெங்கடேஷ், சிவகுமார், மற்றும் செய்தி மக்கள் தொடர்பு ஆலுவலர் சத்யநாராயணன் ஆகியோர் உடனிருந்தனர். 


மக்கள் கருத்து

ப. சுகுமார்Jul 28, 2019 - 01:23:16 AM | Posted IP 162.1*****

இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் ட்ரிபிள்ஸ் செல்வது, செல்லில் பேசிக்கொண்டே இரு சக்கர வாகனங்கள் ஓடுவது.... போன்ற ஒழுங்கற்ற செயல்களை போக்குவரத்து காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

srinivassanJul 24, 2019 - 06:23:42 PM | Posted IP 108.1*****

முதலில் ஒரு வழி சாலையில் வரும் வண்டிகளையே ஒழுங்கா நிப்பாட்டினா போதும் . இரவு ஓவர் வழி சாலையை யாரும் மதிப்பிலாத்தில்லை. போலீஸ் அதை ஒழுங்கு பன்னினால் இந்த ஊர்க்கு ரொம்பா நலல்து

ஹி ஹி ஹிJul 24, 2019 - 01:44:04 PM | Posted IP 162.1*****

அளவளவு போலீசும் மொபைல் போன் தான் பார்ப்பான். வேஸ்ட்

சாந்தன்Jul 17, 2019 - 09:11:44 PM | Posted IP 108.1*****

ஆமாம் - உங்கள் பாராளுமன்ற உறுப்பினரை அழையுங்கள் - திருப்பதி சென்று வெளிய வந்தவர் அங்கே சொன்னமாதிரி இங்கயும் சொல்லலாம் - பகுத்தறிவுவாதி

manithanJul 17, 2019 - 04:42:00 PM | Posted IP 162.1*****

நமது பகுதியில் இன்னும் அதிகமாக CCTV கேமரா பொறுத்தலாமே...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest CakesThoothukudi Business Directory