» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை: பட்டப்பகலில் மர்ம நபர்கள் கைவரிசை!

வெள்ளி 12, ஜூலை 2019 11:58:00 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 3பவுன் தங்கச் செயின், லேப்டாப் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி போல்பேட்டையைச் சேர்ந்தவர் நாராயணன் (65). இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை திருமண விழாவிற்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார். அப்போது, அவரது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 3பவுன் செயின், லேப்டாப், ரூ.7500 பணம் ஆகிவை திருடுபோயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

வீட்டின் பின்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் வீட்டிற்குள் சென்று கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications



CSC Computer Education

Nalam Pasumaiyagam

Black Forest Cakes




Thoothukudi Business Directory