» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துறைமுகம் அருகே விபத்து: லோடுமேன் பரிதாப பலி

வெள்ளி 12, ஜூலை 2019 11:45:03 AM (IST)

தூத்துக்குடி துறைமுகம் அருகே மோட்டார் பைக் மீது லாரி மோதியதில் படுகாயம் அடைந்த லோடு மேன் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

தூத்துக்குடி அருகேயுள்ள குறுக்குச்சாலை சந்திரகிரி, கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கடற்கரை மகன் அடைக்கலம் (35). இவர் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் லோடு மேனாக வேலைபார்த்து வந்தார். நேற்று மாலை வேலை முடிந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். கிரீன்கேட் அருகே வந்தபோது, அவரது பைக் மீது லாரி மோதியது. இதில், படுகாயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இதுகுறித்து தெர்மல் நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Black Forest Cakes




Nalam Pasumaiyagam

Anbu Communications



Thoothukudi Business Directory