» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வாலிபருக்கு சராமாரி வெட்டு: 10பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

வெள்ளி 12, ஜூலை 2019 11:32:50 AM (IST)

தூத்துக்குடியில் முன்விரோதத்தில் வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய 10பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி தாளமுத்துநகர், மாதா நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் மகன் ரத்னகுமார் (25). இவர் அங்குள்ள கோயிலில் இளைஞர் அணி செயலாளராக இருந்துள்ளார். கடந்த மாதம் கோவில் திருவிழாவின்போது ஏற்பட்ட தகராறில்  அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தாக்கினாராம். இதனால் பிரச்சனை எழவே, அவர் ஊரைவிட்டு சென்று தலைமறைவாக இருந்துள்ளார். ஒரு மாதத்திற்கு பின்னர் அவர் நேற்று ஊர் திரும்பியுள்ளார்.  

இந்நிலையில், நேற்று இரவு அவர், அங்குள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டிருந்த போது, 10 பேர் கொண்ட கும்பல் அவரை கம்பு, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஓட ஓட விரட்டிச் சென்று அரிவாளால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது. இதில், படுகாயம் அடைந்த ரத்னகுமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 10பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Anbu Communications
Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory