» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் பகுதியில் 2 வீடுகளில் நகை-பணம் திருட்டு

வெள்ளி 12, ஜூலை 2019 8:30:19 AM (IST)

நாசரேத் பகுதியில் 2 வீடுகளில் கதவை உடைத்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ஜெயபாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மனைவி சத்தியவதி (73). ஓய்வுபெற்ற ஆசிரியை. மனோகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சத்தியவதி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெர்மனி நாட்டில் உள்ள தன்னுடைய மகனின் வீட்டுக்கு சென்றார். எனவே நாசரேத்தில் உள்ள அவரது வீட்டை அப்பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாள் பராமரித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் பேச்சியம்மாள், சத்தியவதியின் வீட்டுக்கு சென்றபோது, அங்கு வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து சத்தியவதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது சத்தியவதி தனது வீட்டில் உள்ள பீரோவில் 2½ பவுன் நகை, ரூ.7 ஆயிரத்தை வைத்து இருந்ததாக தெரிவித்தார். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவு மற்றும் பீரோவை உடைத்து அங்கிருந்த நகை-பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

மற்றொரு சம்பவம் 

நாசரேத் அருகே கச்சனாவிளை கீழ தெருவைச் சேர்ந்தவர் கலாதரன் (61). இவர் மும்பையில் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அங்குள்ள அவரது வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த அரை பவுன் நகை மற்றும் ரூ.9 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. கலாதரனின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரது வீட்டில் புகுந்து நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. இதுகுறித்த புகார்களின்பேரில், நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடுகளில் புகுந்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsCSC Computer Education

Anbu Communications


Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory