» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் சில்லறை வணிகத்தை அழிக்க முயற்சி : வெள்ளையன் குற்றச்சாட்டு

வெள்ளி 12, ஜூலை 2019 8:19:25 AM (IST)

"பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பது சில்லறை வியாபாரிகளை அழிக்கும் செயலாக உள்ளது. " என்று வெள்ளையன் கூறினார்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் நேற்று தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை நடவடிக்கை மிகப்பெரிய குழப்பமாக உள்ளது. அரசின் அறிவிக்கை தெளிவாக இருந்தால் அதிகாரிகள் நடவடிக்கை நன்றாக இருக்கும். அதிகாரிகளின் நடவடிக்கையில் குழப்பம் இருந்தால் லஞ்சம் தான் அதிகரிக்கும். மளிகைப்பொருட்களுடன் சேர்த்து விற்பனை செய்யும் பிளாஸ்டிக் பை மறுசுழற்சி செய்யத்தக்கது. ஆனால் அதிகாரிகள் அந்த பிளாஸ்டிக் பைக்கும் சேர்த்து அபராதம் விதிக்கிறார்கள். சில தானியங்கள் மூட்டையில் இருந்தால் வண்டுகள் மொய்ப்பதற்கு வாய்ப்பு உள்ளது. 

இதனால் பிளாஸ்டிக் பை போன்றவற்றில் அடைத்து வைக்க வேண்டிய நிலை உள்ளது. பிளாஸ்டிக் தடை என்ற பெயரில் அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பது சில்லறை வியாபாரிகளை அழிக்கும் செயலாக உள்ளது. பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் தொழிலை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். மறுசுழற்சி செய்பவர்களுக்கு இலவச மின்சாரம், வட்டி இல்லா கடன் வழங்க வேண்டும். எதை செய்ய வேண்டுமோ அதை இந்த அரசு செய்யவில்லை. அதிகாரிகள் நெருக்கடி போக்கு மூலம் வியாபாரிகளை அழிக்க நினைக்கிறார்கள். இதை கண்டித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து

மக்கள்Jul 12, 2019 - 05:18:34 PM | Posted IP 162.1*****

போராட்டங்களுக்கு மாறாக அரசு ஊழியர்களுக்கு எந்த பொருள்களும் விற்க மாட்டோம்... அரசாங்கம் நல்ல தீர்வு வரும் வரை வரி கட்ட மாட்டோம்...இது போல் மாற்று வழிகளை யோசித்து நல்ல முடிவு எடுங்கள்....

மக்கள்Jul 12, 2019 - 05:16:12 PM | Posted IP 173.2*****

தாங்கள் கூறுவது சரி தான் ஐயா.... கடந்த 10 வருடங்களில் ஸ்டெர்லைட் ஒன்றை தவிர போராட்டங்கள் மூலமும் கடை அடைப்புகள் மூலமும் பெற்ற வெற்றிகள் எத்தனை.....?

அருண்Jul 12, 2019 - 02:39:00 PM | Posted IP 162.1*****

தெளிவான பேச்சு.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education


Black Forest Cakes

Anbu Communications

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory