» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நீதிமன்றத்தில் மேற்கூரை உடைந்து விழுந்தது : வழக்கறிஞர்கள் காயமின்றி தப்பினர்.

வியாழன் 11, ஜூலை 2019 9:06:20 AM (IST)



சாத்தான்குளம் நீதிமன்றத்தில் மழைக்காக போடப்பட்ட பிளாஸ்டிக் மேற்கூரை திடீரென நேற்று உடைந்து விழுந்தது. போலீசார், வழக்கறிஞர்கள் காயமின்றி தப்பினர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் பிரதான சாலையில் குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதில் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் போலீசார் அமரும் இருக்கைக்கு மேல் மழை மற்றும் வெயில் விழாமல் இருப்பதற்காக பிளாஸ்டிக் மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது திடீரென பலத்த சத்தத்துடன் மேற்கூரை உடைந்து விழுந்தது. அப்போது அருகில் நின்ற போலீசார் மற்றும் வழக்கறிஞர்கள் அப்பகுதியில் இருந்து விலகியதால் காயமின்றி தப்பினர். இதையடுத்து வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் புகார் தெரிவித்தனர். 

இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறியதாவது. ரூ 5கோடி மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியம் அருகில் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்களாகியும் திறக்கப்படாமலே உள்ளது. திறக்கப்படாமலே உள்ள நீதிமன்றத்திற்கு இருமாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் பல ஆயிரம் ரூபாய் கட்டப்படுகிறது. மிகுந்த இட நெருக்கடியில் தற்போதைய நீதிமன்றம் வாடகை கட்டிடத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நேற்று வழக்கு விசாரணைக்காக வழக்கறிஞர்களும் களும் பொதுமக்களும் ஏராளமாக திரண்டிருந்த நேரத்தில் மேற்கூரை உடைந்து விழுந்தது. . இது சிறிய விபத்து என்பதால் யாருக்கும் காயம் இல்லை. ஆனால் பெரிய விபத்துகள் ஏற்படுவதற்குள் புதிய நீதிமன்ற கட்டத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes

CSC Computer Education

Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory