» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கள்ளக்காதலை கைவிட மறுத்த மீனவர் கொலை : மனைவி, மகன் கைது - பரபரப்பு தகவல் !!

புதன் 10, ஜூலை 2019 4:19:30 PM (IST)

தூத்துக்குடியில் கடலில் தவறிவிழுந்து மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவர் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக அவரது மனைவி, மகனை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி வெள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் சவரிமுத்து மகன் அந்தோணி சின்னதுரை (43), இவரும் இவரது மகன் மகராஜன் (22) என்பவரும் கடந்த 5ம்தேதி இரவு பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது அந்தோணி சின்னதுரை கடலுக்குள் தவறி விழுந்து விட்டதாக கரை திரும்பிய மகராஜன் தெரிவித்தார். இதையடுத்து அவரை தேடும் பணியில் மரைன் போலீசார் மற்றும் கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், நரிப்பையூர் கடற்கரையில் அந்தோணி சின்னத்துரையின் சடலம் கரை ஒதுங்கியது. 

இதையடுத்து தூத்துக்குடி மறைன் போலீசார் அங்கு சென்று அந்தோணி சின்னத்துரையின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அந்தோணி சின்னதுரை தலையில் கட்டையால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு தாளமுத்துநகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்தோணி சின்னத்துரையின் கொலையில் அவரது மனைவி ரெஸ்லின் மேரி (42), மகன் மகராஜன் (22) ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

கொலைக்கு காரணம் என்ன?

அந்தோணி சின்னதுரைக்கு பல பெண்களுடன் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. மேலும் கள்ளக் காதலிகளை தனது வீ்டிற்கே அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார். இது ரெஸ்லின் மேரி மற்றும் அவரது மகனுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவரை கொலை செய்ய ரெஸ்லின் மேரி திட்டமிட்டுள்ளார். அதன்படி மகராஜன், அந்தோணி சின்னதுரையை கடலுக்கு மீன்பிடிக்க அழைத்துக் சென்று அங்கு அவரை படகில் உள்ள துடுப்பு கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை கடலில் தூக்கி வீசியுள்ளார். பின்னர் தனது தந்தை கடலில் தவறி விழுந்து விட்டதாக நாடகமாடியுள்ளார். தற்போது விசாரணையில் இந்த கொலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து போலீசார் ரெஸ்லின் மேரி மற்றும் அவரது மகன் மகராஜனை கைது செய்துள்ளனர். 


மக்கள் கருத்து

MEGALRAJJul 11, 2019 - 04:48:21 PM | Posted IP 162.1*****

SIRAPANA SAMPAVAM

KAMALAKANNANJul 11, 2019 - 04:47:43 PM | Posted IP 162.1*****

சூப்பர்

geetahaJul 10, 2019 - 06:59:31 PM | Posted IP 162.1*****

அடப்பாவிகளா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Friends Track CALL TAXI & CAB (P) LTD

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory