» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சர்வதேச அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் : காமாஷி வித்யாலயா பள்ளி மாணவி சாதனை

திங்கள் 24, ஜூன் 2019 1:07:55 PM (IST)

சர்வதேச அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தூத்துக்குடி ஸ்ரீகாமாஷி வித்யாலயா பள்ளி மாணவி சாதனை படைத்துள்ளார்.

2வது இந்திய திறந்தவெளி சர்வதேச டேக்வோண்டோ சாம்பியன்ஷிப் போட்டி ஹைதராபாத்தில் 10.06.2019 முதல் 16.06.2019 வரை நடைபெற்றது. இதில் 17 நாடுகள் கலந்து கொண்டது. ஜி1 என்பது உலக தரப்பட்டியலில் பெயர் வரக்கூடிய போட்டியாகும். அதில் இந்திய அணி சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில்  மத்தியஅரசு ஊழியர் காலனியில் அமைந்துள்ள ஸ்ரீகாமாஷி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வருகின்ற மாணவி சுவாதி, கேடட் பிரிவில் 41 முதல் 44 எடை பிரிவில் வெண்கல பதக்கம் பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பாக சர்வதேச டேக்வோண்டோ போட்டியில் பதக்கம் பெறுவது இதுவே முதன்முறையாகும். இதில் வெற்றி பெறுபவர்கள் உலக அளவில் டேக்வோண்டோ போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளார்கள். வெற்றி பெற்ற மாணவி சுவாதி மற்றும் பயிற்சியாளர் ராமலிங்கபாரதி, உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார் ஆகியோரை, பள்ளியின் தலைவர் முத்துக்குமார் , பள்ளியின் செயலாளர் அருணாசலம் , பள்ளி முதல்வர் மீனாகுமாரி மற்றும் பள்ளி ஆசிரிய ஆசிரியைகளும் பாராட்டி வாழ்த்தினர்.


மக்கள் கருத்து

Winner Taekwondo ClubJun 27, 2019 - 09:07:40 AM | Posted IP 108.1*****

சுவாதி நீ டேக்வாண்டோ விளையாட்டில் ஒலிம்பிக் போட்டி வரை சென்று பதக்கம் வென்றுஎன் தாய் திரு நாட்டின் பெயரை உலக அரங்கில் ஒலிக்க செய்ய வேண்டி வாழ்த்துகிறோம்

RamalingaBharathyJun 27, 2019 - 08:58:54 AM | Posted IP 173.2*****

Congratulations Suwathi

காளிமுத்துJun 27, 2019 - 08:49:52 AM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள் சுவாதி

தனம்Jun 24, 2019 - 09:19:33 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam PasumaiyagamBlack Forest Cakes

Anbu Communications

CSC Computer EducationThoothukudi Business Directory