» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆட்சியர் அலுவலகத்திற்கு பிணம் போல் வந்த நபர் : மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு

திங்கள் 24, ஜூன் 2019 12:41:58 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பிணம் போல் வந்த நபரால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. பொதுமக்களிடம் ஆட்சியர் (பொறுப்பு) / மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் மனுக்களை பெற்றார். அப்போது மனு அளிக்க வந்த ஒரு நபர் திடீரென தனது கைப்பையில் வைத்திருந்த மாலையை எடுத்து கழுத்தில் அணிந்து கொண்டார். மேலும், வெள்ளைத் துணியை முகத்தில் கட்டிக் கொண்டு பிணம் போல் படுத்துக் கொண்டார். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்து. இதையடுத்து போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். 

பின்னர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் அந்த நபர், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள செட்டிமல்லன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜசேகரன் என்பது தெரியவந்தது. கடந்த 13 வருடங்களாக அவர்களது கிராமத்தில் மயானம் செல்லும் பாதை தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து பல முறை மனுக்கள் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் இன்று பிணம்போல் ஆட்சியர் அலுவலகத்தில் நூதன போராட்டம் நடத்தியதாகவும் தெரிவித்தார். இவரது நூதன போரடத்தினால்  ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications


Nalam Pasumaiyagam

CSC Computer Education

Black Forest Cakes



Thoothukudi Business Directory