» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து முழுமையாக பஸ்களை இயக்க கோரிக்கை
திங்கள் 24, ஜூன் 2019 11:44:49 AM (IST)
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சென்று வந்த அனைத்து பேருந்துகளும் எஸ்.ஏ.வி பள்ளி மைதானத்தில் இருந்து முழுமையாக இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாவட்ட செயலளார் ரமேஷ் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக நவீன பேருந்து நிலையமாக கட்டப்பட உள்ளதால் தூத்துக்குடி மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள எஸ்.ஏ.வி பள்ளி மைதானத்திற்கு தற்காலிகமாக பேருந்து நிலையம் மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வந்துள்ளது.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் தற்காலிகமாக எஸ்.ஏ.வி பள்ளி மைதானத்திற்கு மாற்றப்படும் போது திருநெல்வேலி, திருச்செந்தூர், திருவைகுண்டம், நாசரேத் உட்பட வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து (எஸ்.ஏ.வி பள்ளி மைதானம்) நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் புறப்பட்டு செல்வதாகவும் செய்திகள் வந்துள்ளது.
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, திருச்செந்தூர், திருவைகுண்டம், நாசரேத் போன்ற வெளியூர் பேருந்துகளை இயக்கினால் தூத்துக்குடியில் போக்குவரத்து இடையூறுகள் விபத்துகள் அதிக அளவில் உருவாகும். மேலும் பொதுமக்களுக்கு கால விரயமும் அதிக பொருளாதார இழப்புகளும் ஏற்படுவதுடன் பலவிதமான நெருக்கடிகள் உருவாகும் வாய்ப்புகள் உள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின் படி தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கி வந்த அனைத்து பேருந்துகளும் முழுமையாக தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என பொது மக்கள் அனைவரும் விரும்புகின்றனர்.
மேலும் கடந்த காலங்களில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருமுறை பராமரிப்பு பணிகள் நடைபெற்ற போது இதே பள்ளி மைதானத்தில் தான் பழைய பேரூந்து நிலைய பேருந்துகள் அனைத்தும் முழுமையாக இயக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் மற்றும் பயணிகள் நலச்சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்வி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
வியாழன் 5, டிசம்பர் 2019 8:21:36 PM (IST)

எலியட் டக்ஸ்போர்டு பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
வியாழன் 5, டிசம்பர் 2019 7:02:11 PM (IST)

செய்துங்கநல்லூரில் ஜெயலலிதா நினைவு நாள்
வியாழன் 5, டிசம்பர் 2019 6:36:05 PM (IST)

பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவன் கையில் ஆசிட் கொட்டியதால் படுகாயம்!!
வியாழன் 5, டிசம்பர் 2019 4:28:09 PM (IST)

மழைநீர் அகற்றும் பணியில் தனியார் நிறுவனங்கள் : தூத்துக்குடி பொதுமக்கள் பாராட்டு
வியாழன் 5, டிசம்பர் 2019 1:55:07 PM (IST)

தூத்துக்குடியில் ஜெயலலிதா 3ம் ஆண்டு நினைவு தினம் : அதிமுக மௌன ஊர்வலம் - அமமுக மலரஞ்சலி!!
வியாழன் 5, டிசம்பர் 2019 11:44:40 AM (IST)
