» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.1.5லட்சம் மதிப்புள்ள ஜவுளி திருட்டு வேன் டிரைவர் கைது

திங்கள் 24, ஜூன் 2019 11:12:04 AM (IST)

திருப்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு வேனில் கொண்டு வந்த ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஜவுளி லோடு திருடுபோனது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூரில் உள்ள போயம்பாளையம், குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்தவர் துரைச்சாமி மகன் சரவண மாணிக்கம் (40). இவர் அங்கு ஜவுளிமில் வைத்துள்ளார். அந்த நிறுவனத்தில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஜவுளி லோடு ஏற்றி வந்த வேனை மதுரை முண்டாசுப்பட்டியைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் மருதுபாண்டி (27) என்பவர் ஓட்டி வந்தார். 

தூத்துக்குடிக்கு வேன் வந்தபோது, அதில் இருந்த ஜவுளிகளை கடை ஊழியர்கள் சரிபார்த்தனர். அப்போது. அதில் இருந்த ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஜவுளி மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் மில்அதிபர் சரவண மாணிக்கம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் விசாரணை நடத்தி வேன் டிரைவர் மருதுபாண்டியை கைது செய்தனர். அவர் பதுக்கு வைத்திருந்த ரூ.1.5லட்சம் மதிப்பிலான ஜவுளிகளை போலீசார் மீட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

CSC Computer Education


Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory