» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி மாணவி திடீர் மாயம் : போலீஸ் விசாரணை

திங்கள் 24, ஜூன் 2019 11:08:11 AM (IST)

சாத்தான்குளத்தில் கல்லூரிக்குச் சென்ற மாணவி மாயமானது குறிதது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் அருள் ஜான்சன். இவரது மகள் ஞான எல்பிதேவ் கிறிஸ்டா (17), அங்குள்ள கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தினமும் கல்லூரிக்கு வேனில் சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 17ம் தேதி கல்லூரிக்குச் சென்றவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லையாம். 

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் தெரியவில்லையாம். இதையடுத்து மகள் காணாமல் போனது குறித்து அருள் ஜான்சன் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

CSC Computer Education


Black Forest Cakes


Anbu Communications




Thoothukudi Business Directory