» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மோசடி செய்த ஏட்டு பணியிடை நீக்கம்: எஸ்பி உத்தரவு

திங்கள் 24, ஜூன் 2019 8:15:17 AM (IST)

திருச்செந்தூரில் மோட்டார் வாகன வழக்கில் வசூலித்த தொகையை நீதிமன்றத்தில் செலுத்தாமல் மோசடி செய்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருச்செந்தூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் கடந்த 1-1-2018 முதல் 31-10-18 வரை எழுத்தராக போக்குவரத்து போலீஸ் ஏட்டு ரஞ்சித்குமார் (34) என்பவர் பணியாற்றி வந்தார். அப்போது 447 மோட்டார் வாகன வழக்குகளில் வசூலித்த அபராத தொகையை நீதிமன்றத்தில் செலுத்தாமல், வழக்கு முடிவுக்கு வந்ததாக போலி எண்களை பதிவு செய்து பணத்தை மோசடி செய்தாராம். 

தற்போது அவர் காடல்குடி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் திருச்செந்தூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே போலீஸ் ஏட்டு ரஞ்சித்குமாரை பணியிடை நீக்கம் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி முரளிரம்பா உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து

முருகேசன்Jun 24, 2019 - 06:21:12 PM | Posted IP 162.1*****

பாராட்டுக்கள். ஆனால் எந்த போலீஸ்காரர்கள் Document check பண்றாங்க purse ஐ தான் check பண்றாங்க. அதிகாரிகள் சரிபண்ணிணாதான் உண்டு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Nalam Pasumaiyagam

CSC Computer Education


Anbu Communications




Thoothukudi Business Directory