» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்: ஆட்சியர் உத்தரவு

செவ்வாய் 18, ஜூன் 2019 8:51:28 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தூத்துக்குடி மாவட்டம், ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணி தகுதியின் அடிப்படையில் நிர்வாக நலன் கருதி கீழ்கண்டவாறு பணியிட மாறுதல் செய்ய உத்தரவிடப்படுகிறது.

விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ஹெலன் பொன்மணி தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஆக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) கருப்பசாமி ஆழ்வார் திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ)  ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ஆழ்வார் திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) தங்கவேல் விளாத்திகுளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆழ்வார் திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) பால ஹரிஹர மோகன் விளாத்திகுளத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன் (கி.ஊ) ஆழ்வார் திருநகரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்  (வ.ஊ) வெங்கடாச்சலம் ஓட்டப்பிடாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். ஓட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி  (வ.ஊ) அலுவலர் சுடலை சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ஆக நியமிக்கப்பட்டுள்ளார். சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) செல்வி சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஆக நியமிக்கப்பட்டுள்ளார். 

சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சிவபாலன் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஆக நியமிக்கப்பட்டுள்ளார். புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) முத்துக்குமார் கயத்தார் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ)ஆக நியமிக்கப்பட்டுள்ளார். கயத்தார் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சுப்புலட்சுமி கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) ஆக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக (வட்டார வளர்ச்சி பிரிவு) அலுவலக மேலாளர்  மாணிக்கவாசகம் கோயில்பட்டி வட்டாட்சியர் வளர்ச்சி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். கோயில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக (வட்டார வளர்ச்சி பிரிவு) அலுவலக மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Anbu CommunicationsNalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory