» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

வியாழன் 13, ஜூன் 2019 8:29:52 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (ஜூன் 14) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) காலை 10.30 மணி அளவில் தூத்துக்குடி ஆசிரியர் காலனி 1 ஆம் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்த முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால்,  பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்போர் தங்களது பயோடேட்டா மற்றும் கல்விச் சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம்.  மேலும், விவரங்களுக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications



CSC Computer Education


Nalam Pasumaiyagam

Black Forest Cakes




Thoothukudi Business Directory