» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீன்பிடி தடைகாலம் 14ம் தேதி நிறைவு : கடலுக்குச் செல்ல மீனவர்கள் ஆயத்தம்!!

வியாழன் 13, ஜூன் 2019 8:18:35 AM (IST)

தூத்துக்குடியில்மீன்பிடி தடைகாலம் 14-ம் தேதி முடியவுள்ள நிலையில் கடலுக்குச் செல்ல ஆயத்தமாக மீனவர்கள் நேற்று முதல் வெள்ளோட்டம் பார்த்தனர்.

தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையிலும், திருவள்ளுர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி நகரம் வரை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் தடைக்காலம் அறிவிக்கப்பட்டது. இதனால் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 412 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகளில் 67 விசைப்படகுகள் 24 மீட்டர் நீளத்துக்கு அதிகமாக உள்ளன. 

இந்த படகு உரிமையாளர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்காக பதிவு செய்ய விண்ணப்பித்து உள்ளனர். அந்த படகுகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் மற்ற விசைப்படகுகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதனால் மீனவர்கள் மீன்பிடித்தலுக்கு செல்லும் வகையில் தங்கள் படகுகளில் உள்ள சிறு, சிறு பழுதுகளை நீக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர். அந்த பணிகள் முடிக்கப்பட்டு நேற்று முதல் வெள்ளோட்டம் பார்த்தனர். அதே போன்று வலைகளில் ஏற்பட்ட சேதங்களையும் சரி செய்தனர். இந்த வலை மற்றும் டீசல் உள்ளிட்டவைகளை மீனவர்கள் நேற்று முதல் விசைப்படகுகளில் ஏற்றும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் நாளை மறுநாள் (15-ம் தேதி) முதல் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயாராகி வருகின்றனர். விசைப்படகுகள் கடலுக்கு செல்வதால் மீன்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications

CSC Computer Education

Black Forest Cakes


Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory