» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குழந்தைகள் இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்: ஆட்சியர் உத்தரவு

வியாழன் 13, ஜூன் 2019 8:10:22 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர் நீதிசட்டம் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) 2015–ன் கீழ் 87 குழந்தைகள் இல்லங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 2 குழந்தைகள் இல்லங்கள் அரசின் கட்டுப்பாட்டின் கீழும், 1 குழந்தைகள் இல்லம் இந்து சமய அறநிலையத்துறையின் கீழும் இயங்கி வருகின்றன. 9 குழந்தைகள் இல்லங்கள் சமூக பாதுகாப்புத்துறையின் மானியம் பெற்றும், 62 குழந்தைகள் இல்லங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் இயங்கி வருகின்றன. 13 குழந்தைகள் இல்லங்கள் 2018–2019 கல்வியாண்டில் இயங்கவில்லை.

தூத்துக்குடியில் தற்போது இயங்கி வரும் 74 குழந்தைகள் இல்லங்களிலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டு உள்ள குறைந்தபட்ச தரங்கள் பின்பற்றப்பட வேண்டும். குழந்தைகள் இல்லங்களில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் குடிநீர் உடனடியாக பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும். பெண் குழந்தைகள் மட்டும் தங்கி பயிலும் குழந்தைகள் இல்லங்களில் நிர்வாகி மற்றும் பணியாளர்கள் பெண் பணியாளராக இருத்தல் வேண்டும். ஒரு வார காலத்திற்குள் குழந்தைகள் இல்லங்களில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் போலீசாரின் தடையில்லா சான்று பெறப்பட வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து குழந்தைகள் இல்லங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


CSC Computer Education


Anbu Communications


Black Forest Cakes




Thoothukudi Business Directory