» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லோடு ஆட்டோவில் இருந்து குதித்த மாணவன் பலி: லிப்ட் கேட்டு சென்றபோது பரிதாபம்!!

வியாழன் 13, ஜூன் 2019 7:55:33 AM (IST)

சாத்தான்குளம் அருகே ஓடும் லோடு ஆட்டோவில் இருந்து குதித்து பள்ளி மாணவன் பலியானான். ‘லிப்ட்‘ கேட்டு சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சடையங்கிணறு காலனி நடுத்தெருவை சேர்ந்தவர் டேவிட்ராஜ். இவருடைய மகன் ஞானசெல்வம் (9). இவன் சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 5–ம் வகுப்பு படித்து வந்தான். இவன் தினமும் காலையில் பள்ளிக்கூடத்துக்கு பஸ் அல்லது அந்த வழியாக செல்லும் யாரிடமாவது ‘லிப்ட்‘ கேட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு ஞானசெல்வம் புறப்பட்டான். பஸ் ஏதும் வராததால் அந்த வழியாக நாசரேத்தில் இருந்து சாத்தான்குளம் நோக்கி வந்த லோடு ஆட்டோவை கையினால் சைகை காட்டி ‘லிப்ட்‘ கேட்டான். 

லோடு ஆட்டோ டிரைவரான நாசரேத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் வண்டியை நிறுத்தி பின்னால் ஏறிக்கொள்ளுமாறு ஞானசெல்வத்திடம் கூறினார். அவனும் லோடு ஆட்டோவில் பின்னால் ஏறினான். ஆனால் லோடு ஆட்டோ ஞானசெல்வம் இறங்கும் இடத்தை கடந்து சென்றது. இதனால் பதறிப்போன ஞானசெல்வம் உடனடியாக ஓடும் லோடு ஆட்டோவில் இருந்து வெளியே குதித்தான். இதில் நிலைதடுமாறிய அவன் சாலையில் விழுந்தான். இதனால் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.. இதை அறிந்த லோடு ஆட்டோ டிரைவர் முத்துக்குமார் வண்டியை நிறுத்தினார்.

இதுகுறித்து உடனடியாக சாத்தான்குளம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஞானசெல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசில் ஞானசெல்வத்தின் சித்தப்பா பெல்சன் அந்தோணி புகார் செய்தார். இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, லோடு ஆட்டோ டிரைவர் முத்துக்குமாரை கைது செய்தார். சாத்தான்குளம் அருகே ஓடும் லோடு ஆட்டோவில் இருந்து குதித்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam PasumaiyagamAnbu CommunicationsBlack Forest Cakes

CSC Computer EducationThoothukudi Business Directory