» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சுதந்திர தின விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

புதன் 12, ஜூன் 2019 5:03:16 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 2019ஆம் அண்டிற்கான சுதந்திர தின விருதுக்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2019ஆம் அண்டிற்கான பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தற்பொழுது தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த சேவை நிறுவனத்திற்கு கௌரவிக்கும் பொருட்டு சுதந்திர தின விருது வழங்க ஆணை பெறப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவர். 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூகநலன் சார்ந்த நடவடிக்கைகள் பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மகளிர் நலனுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சிறந்த சமூக சேவை நிறுவனம் மற்றும் சிறந்த சமூக சேவராக இருத்தல். 

விண்ணப்பதாரர் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாக சேவை புரிந்த விபரம் 1 பக்க அளவில் தமிழ் (வானவில் அவ்வையார்) மற்றும் ஆங்கிலத்தில் (Arial) (Soft Copy and Hard Copy) அனுப்ப வேண்டும். விண்ணப்பதாரரின் கருத்துரு(Booklet -2) (தமிழ்-1 மற்றும் ஆங்கிலம்-1) மற்றும் Passport Size Photo உடன் இவ்வலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 20.06.2019 தகுதியுடையவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.

மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கோரம்பள்ளம்,
தூத்துக்குடி-628101 தொலைபேசி 0461-2325606


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Black Forest Cakes

Anbu Communications


CSC Computer Education
Thoothukudi Business Directory