» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரூ.12லட்சம் கடன் மோசடி: கணவன்-மனைவி உட்பட 3பேர் மீது வழக்கு

புதன் 12, ஜூன் 2019 4:28:30 PM (IST)

எட்டயபுரத்தில் ரூ.12லட்சம் மோசடி செய்துவிட்டு தலைமறைவான  கணவன்-மனைவி உட்பட 3பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பழைய காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகன் மகன் சீனிவாசன் (42). இவரிடம் நடுவப்பட்டி சிங்காரத் தோப்பு பகுதியைச் சேர்ந்த சிவமோகன்ராஜ் (43), அவரது மனைவி சுந்தரலெட்சுமி (35), அவரது தந்தை முருகேசன் (68) ஆகிய மூவரும் ரூ.12 லட்சம் கடன் வாங்கினார்களாம். பின்னர் அந்த கடனை திருப்பித் தரவில்லையாம். 

இதற்கிடையில் சிவமோகன்ராஜ் குடும்பத்தினர் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார்களாம். இதையடுத்து சீனிவாசன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு எஸ்ஐ ரோஸ் மேரி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.  தலைமறைவாக உள்ள சிவமோகன்ராஜ், அவரது மனைவி உட்பட 3பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam

Anbu Communications


Black Forest Cakes

CSC Computer Education
Thoothukudi Business Directory