» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விமானநிலையத்தில் பிளாஸ்டிக்பாட்டில் உடைக்கும் இயந்திரம் துவக்கிவைப்பு

புதன் 12, ஜூன் 2019 12:06:46 PM (IST)



துாத்துக்குடி விமான நிலையத்தில் சுற்றுப்புறசூழலை பாதுகாக்க வேண்டி பிளாஸ்டிக் பாட்டில்களை உடைக்கும் இயந்திரம் துவக்கி வைக்கப்பட்டது.

துாத்துக்குடி வாகைக்குளத்தில் உள்ள விமானநிலையத்திற்கு வரும் பயணிகள் பிளாஸ்டிக்பாட்டில்களை தூக்கி எறிவதை தடுக்கவும், சுற்றுப்புற சூழலை மேம்படுத்தவும் விமாநிலையத்தின் முகப்பில் ரூ. 1.26 கோடி மதிப்பில் பிளாஸ்டிக் பாட்டில்களை உடைக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. 

இதற்கான துவக்கவிழா துாத்துக்குடி வாகைக்குளம் விமானநிலையத்தில் நேற்று நடைபெற்றது. இயந்திரத்தினை விமானநிலைய இயக்குனர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் விமானநிலைய மேலாளர் ஜெயராமன் மற்றும் ஊழியர்கள், பயணிகள் கலந்து கொண்டனர். 

பயணிகள் இந்த இயந்திரத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை போட்டால் இயந்திரம் பிளாஸ்டிக் பாட்டில்களை சுக்குநுாறாக உடைத்து விடும். அதை மறுசுழற்சி செய்தும் பயன்படுத்த இயலும். பயணிகள் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி விமானநிலையத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், மேலும் சுற்றுச்சூழலை மேம்படுத்த உதவ வேண்டுமென விமானநிலைய இயக்குனர் சுப்பிரமணியன் கேட்டு கொண்டார். 


மக்கள் கருத்து

நண்பன்Jun 12, 2019 - 03:59:07 PM | Posted IP 162.1*****

ஒரு கோடியா ??.....யார் இதை வாங்கி கொடுத்தார்கள் ? நம் வரிப் பணம் அல்லவா ? தினமும் 1 அல்லது 2 பிலைட் தான் உள்ளது...அப்படி தேவை என்றால் ....இதற்கு பதிலாக ரயில்வே அல்லது பேருந்து நிலையத்தில் வைத்திருக்கலாமே ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Nalam Pasumaiyagam

Anbu Communications

CSC Computer Education


Black Forest Cakes




Thoothukudi Business Directory