» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தம்பி கொலை வழக்கில் ஜாமீனில் வந்த பில்லா ஜெகன் மீண்டும் கைது : பாளை சிறையில் அடைப்பு

செவ்வாய் 11, ஜூன் 2019 11:47:16 AM (IST)

தூத்துக்குடியில் தம்பி கொலை வழக்கில் ஜாமீனில் வந்த பில்லா ஜெகன் மீண்டும் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டார். 

தூத்துக்குடி சின்ன கடைத் தெருவைச் சேர்ந்தவர் பில்லா ஜெகன். தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவராக உள்ளார். மேலும், தி.மு.க தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராகவும் இருந்தார். இவருக்கு ரவி, சுமன், சிமன்சன் என 3 தம்பிகள். பில்லா ஜெகனுடன் தம்பிகள் லாரி டிரான்ஸ்போர்ட் தொழிலைக் கவனித்து வந்தனர். 

இந்நிலையில், பில்லா ஜெகனுக்கும் அவரது கடைசித் தம்பியான சிமன்சனுக்கும் இடையே சொத்துப் பிரச்னை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பில்லா ஜென், கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி தம்பி சிம்சனை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். பின்னர் தலைமறைவான பில்லாஜெகனை கேரளாவில் போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் திமுக இளைü் அணி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். 

இந்நிலையில், தம்பி கொலை வழக்கில் கைதான பில்லா ஜெகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வந்தார். தினமும் காவல் நிலையத்தில் ஆஜராக கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில், நேற்று தாளமுத்துநகர் போலீசார் நேற்று இரவோடு இரவாக அவரைக் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் தூத்துக்குடி மாஜிட்ரேட் முன் ஆஜர் படுத்தப்பட்ட அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க மாஸ்ட்ரோட் உத்தரவிட்டார். இதையடுத்து பில்லா ஜெனை போலீசார் பாளை சிறையில் அடைத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications



Nalam Pasumaiyagam

Black Forest Cakes


CSC Computer Education



Thoothukudi Business Directory