» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து: பெண் உட்பட 3பேர் கைது

செவ்வாய் 11, ஜூன் 2019 11:27:04 AM (IST)

தூத்துக்குடியில் செடியை சேதப்படுத்தியதால் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது. இது தொடர்பாக பெண் உட்பட 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தூத்துக்குடி விஇ ரோட்டைச் சேர்ந்தவர் சார்லின் மகன் தாசன் கயாஸ் (38) இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் கேசவன் என்பவரது வீட்டில் கடந்த வாரம் குடும்ப விழா ஒன்று நடந்தததாம். இவ்விழாவிற்கு வந்த உறவினர்கள் தாசன் கயாஸ் வீட்டிலிருந்த குரோட்டன்ஸ் செடியை சேதப்படுத்திவிட்டார்களாம். இதற்கு இழப்பீடு கேட்டு கயாஸ், கேசவனின் மனைவி முத்துலதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த முத்துலதா, அவரது உறவினர்கள் லெவிஞ்சிபுரம் முதல் தெருவச் சேர்ந்த முத்துராஜ் மகன் பிரசன்னா (30), பிரையன்ட் நகரைச் சேர்ந்த பலவேசம் மகன் செல்வம் (24), உட்பட 4பேர் சேர்ந்து தாசன் கயாஸை தாக்கி பீர் பாட்டிலால் குத்தினார்களாம். இதில் காயம் அடைந்த தாசன் கயாஸ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப் பதிந்து முத்துலதா, பிரசன்னா, செல்வம் ஆகிய 3பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் பாஸ்கர் என்பவரை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Nalam Pasumaiyagam


CSC Computer Education




Black Forest Cakes



Thoothukudi Business Directory