» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் நீதிபதிகள் திடீர் விலகல்

செவ்வாய் 11, ஜூன் 2019 10:59:39 AM (IST)

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் இன்று இடைக்கால தீர்ப்பு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் இவ்வழக்கில் இருந்து நீதிபதிகள் இருவர் விலகியுள்ளனர். 

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிறுத்தி வைத்ததை அடுத்து வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்றதோடு, உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா குழுமத்திற்கு அறிவுறுத்தியது. 

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்டு வேதாந்த நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இன்று இவ்வழக்கில் இடைக்கால தீர்ப்பு வழங்கப்படும் என்ற தகவல் வெளியானது. இதில் திடீர் திருப்பமாக நீதிபதிகள் சசிதரன், ஆஷா ஆகியோர் இந்த வழக்கில் இருந்து விலகுவதாக அறித்துள்ளனர். மதுரை கிளையில், ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதால், இந்த வழக்கை விசாரிக்கவில்லை எனக்கூறியுள்ள நீதிபதி சசிதரன், வழக்கை வேறு அமர்விற்கு மாற்றவும் பரிந்துரை செய்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications

CSC Computer EducationNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory