» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அண்ணாச்சிக்கு போஸ்டர் அடித்த அதிமுக பிரமுகர்

வெள்ளி 24, மே 2019 6:57:32 PM (IST)தூத்துக்குடி திமுக மாவட்ட செயலாளராக இருந்த என்.பெரியசாமிக்கு அதிமுக பிரமுகர் செங்குட்டுவன் நினைவு நாள் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் தனியாக பிரிந்த 1987-ம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை 30 ஆண்டு காலம் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செயலாளராக பணியாற்றியவரும், தூத்துக்குடி நகராட்சி தலைவராகவும், இரண்டு முறை தூத்துக்குடி எம்எல்ஏ.,ஆகவும் இருந்தவர் பெரியசாமி. கலைஞரின் முரட்டு பக்தர் என செல்லமாக அழைக்கப்பட்டார். 

பெரியசாமி நகராட்சி தலைவராகவும், தூத்துக்குடி எம்எல்ஏ.,ஆகவும், திமுக மாவட்ட செயலாளராகவும் இருந்த போதும் தினசரி காலை தனது வீட்டிற்கு கோரிக்கை மனு அளிக்க வருபவர்களை சந்தித்து அவர்களை கோரிக்கைகளை கேட்டு உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து பிரச்சனையை முடித்து வைப்பார். 

கட்சி பாகுபாடின்றி அனைவரது கோரிக்கைகளையும் பிரச்சனைகளையும் கேட்டு தீர்த்து வைப்பார் என மாற்றுகட்சியினரே கூறுவதுண்டு. அவரது இரண்டாம்ஆண்டு நினைவுநாள் வரும் ஞாயிற்றுகிழமை அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் மறைந்த என்.பெரியசாமிக்கு அதிமுக பிரமுகர் வழக்கறிஞர் செங்குட்டுவன் நினைவுநாள் போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரில் அண்ணாச்சிக்கு 2ம் ஆண்டு இதயஅஞ்சலி என குறிப்பிடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் திமுக மற்றும் அதிமுகவினரிடையே இந்த போஸ்டர் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. 


மக்கள் கருத்து

தூத்துகுடியன்மே 25, 2019 - 01:59:02 PM | Posted IP 162.1*****

விரைவில் திமுகவில் சேர போகிறார் .

சாமிமே 25, 2019 - 11:23:48 AM | Posted IP 108.1*****

வைகோ கூட காளிமுத்துவிற்கு போஸ்டர் அடித்தார் தம்பி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education
Black Forest Cakes

Anbu Communications


Nalam PasumaiyagamThoothukudi Business Directory