» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை அசம்பாவிதம் நிகழக்கூடாது : காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை

செவ்வாய் 21, மே 2019 6:37:18 PM (IST)



தூத்துக்குடி மாநகரில் நாளை அமைதி நிலவிட மதுரை தென் மண்டல ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன்,  தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாநகரில் நாளை (22.05.2019)  அமைதி நிலவிட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மதுரை தென் மண்டல ஐ.ஜி  சண்முகராஜேஸ்வரன்,  தலைமையில் இன்று மாலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்திற்கு திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி கபில்குமார் சரத்கார்,  மற்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., முரளிரம்பா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் நாளையதினம் எந்தவித சிறிய அசம்பாவிதம் கூட எதுவும் நிகழாமல் சிறந்த முறையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. 

நாளைய தின பாதுகாப்புக்காக விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களிலிருந்து பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். 7 ஏடிஎஸ்பிக்கள், 28 டிஎஸ்பிக்கள், 103 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 280 சப்இன்ஸ்பெக்டர்கள் உட்பட சுமார் 2300 காவல்துறையினர் மற்றும் 6 கம்பெனி தமிழ்நாடு சிறப்புக் காவல்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.    


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


CSC Computer Education

Black Forest Cakes




Anbu Communications



Thoothukudi Business Directory