» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துபாயில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடல் நாளை சொந்த ஊர் கொண்டுவரப்படுகிறது

செவ்வாய் 21, மே 2019 5:53:33 PM (IST)

துபாய் கப்பலில் பணியில் இருந்தபோது உயிரிழந்த புன்னக்காயல் மாலுமியின் உடல் நாளை சொந்த ஊரில் அடக்கம் செய்யப்படுகிறது. 

தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயல் நடுத்தெருவைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி மகன் கிப்சன் (23). இவர் துபாய் நாட்டிலுள்ள கிரேட்டீசியன் என்ற கப்பலில் மாலுமியாக வேலைபார்த்து வந்தார். கடந்த 15ஆம் தேதி இவர் பணியில் இருந்த போது, கப்பலில் உள்ள எண்ணெய் டேங்கை சுத்தம் செய்ய முயன்றபோது தவறி விழுந்து உயிரிழந்தார். இதுதொடர்பாக கப்பலின் கேப்டன் அளித்த தகவலின் பேரில் அவரது உடல் மீட்கப்பட்டு துபாய் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

மேலும் இதுகுறித்து இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உடலை  சொந்த ஊருக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும், தொடர்ந்து கப்பல் மாலுமிகள் சங்கத்தின் முயற்சியால் இறந்த மாலுமி கிப்சனின் உடல் நாளை சொந்த ஊர் கொண்டு வரப்படுகிறது. பின்னர் உறவினர்கள் அஞ்சலிக்கு பின்னர் காலை 10 மணியளவில் அடக்கம் செய்யப்பட உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Anbu CommunicationsCSC Computer Education

Black Forest Cakes
Thoothukudi Business Directory