» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூடு நினைவுச் சின்னம்: டிடிவி தினகரன் அறிக்கை
செவ்வாய் 21, மே 2019 5:38:35 PM (IST)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என அமமுக துணைப் பொதுச் செயலளார் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தின் வரலாற்றிலேயே இதுபோன்ற ஒரு பயங்கரம் எங்கும் நிகழ்ந்ததில்லை என்றும் சொல்லும் அளவுக்கு, கடந்த ஆண்டு மே 22ம் தேதி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் துரோகக் கும்பல் சொந்த மக்களிடையே நரவேட்டை ஆடியது. நச்சுப்பிடித்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியான வழியில் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
சுவாசிக்கும் காற்றையும், குடிக்கும் தண்ணீரையும் நச்சாக மாற்றி, எங்கள் வாழ்க்கையை நரமாக மாற்றும் ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என்று அந்த மக்கள் கேட்டதற்காக, ஹிட்லர், இடி அமீன் போன்றோரை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு இந்த துரோக ஆட்சியாளர்கள் நடந்து கொண்டனர். அதிலும் 12ம் வகுப்பு மாணவியான அன்பு மகள் ஸ்னோலின் வாய்க்குள் சுடப்பட்டு வீழ்ந்து கிடந்த கோரத்தை எப்போது நினைத்தாலும் துக்கம் தொண்டையை அடைக்கிறது. 22 வயதான காளியப்பனை சுட்டுக்கொண்ரு அவரது சடலத்தை காவல்துறையினர் காலால் எட்டி உதைத்துத் தள்ளிய கொடுமையை எவ்வாறு மறக்க முடியும்?
இப்படி 13 பேரையுமே மிகக்கொடூரமான முறையில் தான் பழனிசாமியின் காவல்துறை சுட்டு வீழ்த்தியது. அத்தனை பெரிய பயங்கரம் நடந்த பிறகு முதல்வர் பழனிசாமி தூத்துக்குடி பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. உகாண்டாவிலும், உஸ்பெகிஸ்தானிலும் யாராவது இறந்தால் கூட உடனே ட்விட்டரில் இரங்கல் தெரிவிக்கும் பிரதமர் மோடி, சொந்த நாட்டின் தூத்துக்குடியில் நடந்ததற்கும், தமக்கும் தொடர்பே இல்லாதது போல் இருந்துவிட்டார்.
மக்களுக்காகத்தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் இல்லை என்பதை மறந்து துரோக் ஆட்சியாளர்கள் ஆடிய வெறியாட்டம் நிகழ்ந்து ஓராண்டாகிவிட்டாது. ஆனாலும் அந்த துயரத்தின் ரணம் இன்னும் ஆறவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை. அதேநேரத்தில் எப்படியாவது ஆலையை மீண்டும் திறந்துவிட வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் துடிக்கிறது. பெயருக்கு அவர்களை எதிர்ப்பது போக நாடகமாடும் துரோகக்கும்பல், ஸ்டெர்லைட் ஆலை எப்போதும் திறக்கப்படக்கூடாது என்ற கொள்கை முடிவை தமிழக அமைச்சரவையில் வைத்து உடனடியாக எடுக்க வேண்டும். கொல்லப்பட்ட 13 பேருக்கும் நினைவுச்சின்னம் அமைத்திட வேண்டும்.
பதற்றம் மிகுந்திருந்த நாட்களில் யாரையுமே உள்ளே விடாத தூத்துக்குடி மக்கள், தங்களோடு என்னையும் இருக்கச்சொல்லி தங்களின் ஒருவனாக நினைத்து பக்கத்தில் அமரவைத்து, உணர்வுகளை பகிர்ந்துகொண்ட மணித்துளிகள் மனதை விட்டு அகலவில்லை. அந்த உள்ளன்போடும், உரிமையோடும், ஸ்டெர்லைட்டை எத்ரிப்பதில் தூத்துக்குடி மக்களோடு என்றும் அமமுக இருக்குன் என்ற உறுதியை முதலாமாண்டு நினைவு தினத்தில் அளிக்கிறேன் என டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
புதன் 27, ஜனவரி 2021 5:21:54 PM (IST)

டெல்லி வன்முறை : விவசாயிகளுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
புதன் 27, ஜனவரி 2021 5:07:58 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினர் 17 பேருக்கு எஸ்பி பாராட்டுச்சான்றிதழ் வழங்கினார்.
புதன் 27, ஜனவரி 2021 4:12:51 PM (IST)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரத்த தான முகாம்
புதன் 27, ஜனவரி 2021 4:02:18 PM (IST)

ஜன.29ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆய்வு!!
புதன் 27, ஜனவரி 2021 3:22:46 PM (IST)

எழுத்தாளர் முதுதாலங்குறிச்சி காமராசுவுக்கு விருது
புதன் 27, ஜனவரி 2021 3:12:06 PM (IST)
