» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கேன்சர் நோயை தடுக்கும் வாழைத்தண்டு சர்பத் : திருச்செந்தூர் பக்தர்களுக்கு வழங்கல்

வியாழன் 16, மே 2019 6:32:11 PM (IST)



வாழைப்பட்டு ஆராய்ச்சி மையத்தின் நிறுவனநாள் தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு இலவசமாக வாழைத்தண்டு சர்பத் வழங்கப்படுகிறது.

அறுவடைக்கு பின் விவசாய கழிவாக மாறும் வாழைமரத்தின் இலை, பூ, தண்டு என அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் வாய்ந்தது கொடியநோய்களை போக்கக்கூடியது. இதனை பற்றி தூத்துக்குடி விஞ்ஞானி முருகன் ஆராய்ச்சி செய்து வருகிறார். ஆராய்ச்சியின் பலன் மக்களை சென்றடையும் பொருட்டு வாழைத்தண்டு சர்பத் , இலவசமாக ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. 

இது குறித்து விஞ்ஞானி முருகன் கூறும் போது இந்த வாழைத்தண்டு சர்பத் உடலுக்கு நன்மை தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கேன்சர் நோயை வரவிடாமல் தடுக்கும் சக்தி உடையது. இந்த வாழைத்தண்டு சர்பத் வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவில் செல்லும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. 

இதுவரையில் சுமார் ஆறுலட்சம் பேர்களுக்கு வாழைத்தண்டு சர்பத் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது என விஞ்ஞானி முருகன் தெரிவித்தார். நாளை தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரி எதிரிலும், பிரையண்ட்நகர் 8ம் நம்பர் தெரு மற்றும் திருச்செந்தூர் கோவில் ரோட்டிலும் வாழைத்தண்டு சர்பத் இலவசமாக வழங்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD




Black Forest Cakes




Thoothukudi Business Directory