» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சுற்றுலா பேருந்து விபத்து : பெண் உட்பட 14பேர் காயம்

வியாழன் 16, மே 2019 5:32:34 PM (IST)



கோவில்பட்டியில் சாலையில் நடுவே இருந்த தடுப்பு வேலியில் சுற்றுலா பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்படி அருகேயுள்ள செக்குமேடு, பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கடந்த 10ஆம் தேதி கேரளா மாநிலத்திற்கு தனியார் பேருந்தில் சுற்றுலா புறப்பட்டுள்ளனர். பேருந்தை ஆரணியை சேர்ந்த சேகர் என்பவர் ஓட்டிவந்துள்ளார். கேரளா சென்றுவிட்டு, நேற்று கன்னியகுமாரி, திருச்செந்தூர், நவதிருப்பதிகளை பார்த்து விட்டு, இன்று மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்திற்கு சென்றுள்ளனர். 

இன்று அதிகாலை கோவில்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் கூடுதல் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டு இருந்த போது திடீரென நிலைதடுமாறி சாலையில் நடுவே இருந்த தடுப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்தும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

CSC Computer Education

Anbu Communications


Black Forest Cakes




Thoothukudi Business Directory