» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கமல் கட்சியால் கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாடல்

வியாழன் 16, மே 2019 5:24:01 PM (IST)

"கமல் ஒரு கத்துக்குட்டி. அவரது கட்சி ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது" என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது "சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கமல் கூறியது சரித்திர உண்மையா? சரித்திர உண்மை என்று கூறி கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார். அதற்கு முன்பு பல கசப்பான உண்மைகள் உள்ளன. அவை மறக்க வேண்டியவை, மன்னிக்க வேண்டியவை. அதைப் பற்றி மீண்டும் பேசினால் மத நல்லிணக்கத்திற்கு கேடுவிளைவிக்கும். 

அந்த சம்பவங்களுக்கு சாதாரண மனிதன் போக வேண்டாம். இஸ்லாமியர்களின் ஓட்டுகளை பெறுவதற்காக அவர் இவ்வாறு பேசியுள்ளார். அமைச்சர்களை வேட்டி கசங்காமல் வீட்டுக்கு அனுப்புவேன் என்று கமல் கூறுகிறார். அம்மா ஆட்சி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. கமல் ஒரு கத்துக்குட்டி. அவரது கட்சி ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. இவரது கட்சிக்கு எவ்வளவு ஓட்டு விழும் என்பதை பார்த்து விடுவோம் என்றார்.


மக்கள் கருத்து

வந்துமே 17, 2019 - 03:22:49 PM | Posted IP 108.1*****

முதல்ல அடுத்த தேர்தலில் நீ வெற்றி பெருவாயன்னு பாருடா பன்னாடை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu CommunicationsFriends Track CALL TAXI & CAB (P) LTD
Thoothukudi Business Directory