» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இடைத் தேர்தல் பாதுகாப்பு பணி : எஸ்பி ஆலோசனை

வியாழன் 16, மே 2019 3:18:47 PM (IST)ஓட்டப்பிடாரம் இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள காவல்துறையினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் அறிவுரை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் சட்டசபை இடைத்தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடைபெறவுள்ளதால், அதன் பாதுகாப்பு பணியில் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் காவல்துறையினர் வாக்குச்சாவடிகளில் எவ்வாறு பணிபுரிய வேண்டும் என்பது குறித்தும், அதில் என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன செய்யக்கூடாதென்பது பற்றியும், தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள விதிமுறைகளை பின்பற்றியும் தேர்தல் பாதுகாப்பு பணியை எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் சிறப்பான முறையில் பணிபுரிய வேண்டுமென ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, மற்றும் தேர்தல் பார்வையாளர் சதீஷ்குமார் சர்மா ஆகியோர் அறிவுரை வழங்கினார்கள்.

அதே போன்று மொபைல் வாகன அதிகாரிகள் மற்றும் தேர்தல் அலுவல் புரியும் காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் நிர்வாகம் பொன்ராமு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வேதரத்தினம், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் பிரகாஷ், தூத்துக்குடி ஊரகம் முத்தமிழ், விளாத்திக்குளம் ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் சகாய ஜோஸ், பயிற்சி துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பாலமுருகன், தேர்தல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் அருள் ரோஸ் சிங் உட்பட காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Anbu Communications


New Shape TailorsNalam Pasumaiyagam

CSC Computer Education

Joseph MarketingThoothukudi Business Directory