» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கல்லூரி மாணவி காதலனுடன் மாயம்? தந்தை புகார்!!

வியாழன் 16, மே 2019 11:47:25 AM (IST)

மாசார்பட்டி அருகே அருகே காதலனுடன் மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம், மாசார்பட்டி அருகே உள்ள பட்டிதேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகள் தீபா (20), அருப்புகோட்டையில் உள்ள கல்லூரியில் பிகாம் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அருப்புக்கோட்டை, காமராஜர் நகரைச் சேர்ந்த துரைமுருகன் மகன் கமலேஷ்குமார் (23) என்ற வாலிபரை காதலித்து வந்தாாம். இந்த விபரம் தெரியவரவே தீபாவின் குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர். 

இந்நிலையில், கடந்த 14ஆம் தேதி கல்லூரிக்குச் சென்ற தீபா அதன் பின்னர் வீடுதிரும்பவில்லையாம். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றி எந்த தகவலும் தெரியவில்லையாம். இதுகுறித்து தீபாவின் தந்தை மாசார்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதில் தனது மகளை கமலேஷ்குமார் கடத்திச் சென்றதாக கூறியுள்ளார். போலீசார் வழ்ககுப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


New Shape Tailors


Joseph Marketing

Anbu Communications


Black Forest Cakes

CSC Computer Education



Thoothukudi Business Directory